சென்னை:
மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மின்சார ரயில் டிக்கெட்களை மெட்ரோ ரயில் நிலையங்களில் பெரும் வசதிக்கான விரைவில் நடைமுறைக்கு வரும்; எழும்பூர், செண்ட்ரல், கிண்டி மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த வசதிக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.