சென்னை

மீனம்பாக்கம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

 

சென்னை நகரில் கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில், திரிசூலம்- மீனம்பாக்கம் இடையே உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னை கடற்கரை- தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தண்டவாளத்தில் ஏற்பட்டுள்ள விரிசலைச் சரிசெய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.