வேலூர்: வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக்கில் உள்ள பேட்டரி வெடித்து சிதறியதால் ஏற்பட்ட விபத்தில், தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் அருகே உள்ளது சின்ன அல்லாபுரம். இங்கு கேபிள்டவி ஆபரேட்டராக துரைவர்மா என்பவர் இருந்து வருகிறார். இவர் எலக்ட்ரிக் பைக் உபயோகித்து வருகிறார். நேற்று இரவு அவர் தனது வீட்டில் பைக்குக்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளார். அப்போது நள்ளிரவு, பைக்கில் இருந்து பேட்டரி வெடித்து, கடுமையான புகை மூட்டம் சூழ்ந்துள்ளது. இதனால், மூச்சுத்திணறலுக்கு ஆளான அவரும், அவரது மகள் பிரித்தியுர், வீட்டினுள் இருந்த கழிவறையில்  சென்று அங்கிருந்த தப்பிக்க முயற்சித்துள்ளனர்.

ஆனால், அதற்குள் வீடு முழுவதும் புகைமூட்டம் சூழ்ந்ததால், அதை சுவாதித்த இருவரும் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து, இருவர்களின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் மின்சார வாகனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து வரும் நிலையில், எலக்ட்ரிக் பைக் வெடித்து சிதறியிருப்பது, பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.