சென்னை:
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்காக அமல்படுத்தபட்டிருந்த தேர்தல் நடத்தை விதிகள் இன்று முதல் விலக்கிக்கொள்ளப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல், கடந்த ஆண்டு (2019) டிசம்பர் மாதம் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று டிசம்பர் மாதம் 2ந்தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தற்போது, தேர்தல் முடிவடைந்து வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டது. வெற்றி பெற்றவர்கள் வரும் 6ந்தேதி உள்ளாட்சி பிரதிநிதிகளாக பதவி ஏற்க உள்ளனர்.
இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கப்படுவதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.