டெல்லி:

மிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு 4 மாதங்களுக்குள் வார்டு வரையறை பணிகள் முடித்து தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பில் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் கிராம பஞ்சாயத்துக்களில்  உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்து உள்ளது.  ஆனால், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு வரை முறை செய்யவில்லை என்று கூறி, தேர்தலுக்கு தடை விதிக்க திமுக உச்சநீதி மன்றத்தை நாடியது. இது தொடர்பாக நேற்று காரசார விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று, புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு கூறி உள்ளது.

இந்த நிலையில், புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டுள்ள நீதிமன்றம் அந்த மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த 4 மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் தமிழகஅரசுக்கு கெடு விதித்து உள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் தடை செய்யப்பட்ட மாவட்டங்கள்

1) காஞ்சிபுரம்
2) வேலூர்
3) நெல்லை
4) தென்காசி
5) விழுப்புரம்
6) கள்ளக்குறிச்சி
7) செங்கல்பட்டு
8) ராணிப்பேட்டை
9) திருப்பத்தூர்

இந்த ஒன்பது மாவட்டங்களிலும் நான்கு மாதங்களுக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.