ஸ்ரீநகர்:

காஷ்மீரில் நடைபெறும் மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக கொடியில் இருந்த காவி வண்ணத்தை அகற்றிவிட்டு,பச்சை வண்ணத்தை மாற்றியமைத்துள்ளனர்.


ஸ்ரீநகர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடும் ஷேக் காலித் ஜஹாங்கீர் பத்திரிகைகளில் வெளியிட்ட விளம்பரத்தில் காவி வண்ணத்தை காணவில்லை.
மாறாக, பச்சை வண்ணம் பளிச்சென்று தெரிந்தது.

பொதுவாக பாஜகவின் தாமரை சின்னம் காவி வண்ணத்தில் தான் இருக்கும். ஆனால் காஷ்மீரில் மட்டும் தாமரை பச்சை வண்ணத்தில் இருக்கிறது.
வண்ணத்தை மட்டும் காலித் மாற்றவில்லை. அவரது பிரச்சாரமும் பாஜகவின் பிரச்சாரத்திலிருந்து மாறுபட்டுள்ளது.

பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக பேசுகிறார். ஆனால் அரசியல் பேசுவதில்லை. நான் உண்மையை சொல்லியே வாக்கு கேட்கிறேன். பொய் வாக்குறுதிகளை கொடுப்பதில்லை என்கிறார் காலித்.

பாஜக முஸ்லிம்களுக்கு எதிரான கட்சி அல்ல என்று கூறிய அவர், பாஜக தேசிய மற்றும் மதசார்பற்ற கட்சி என்றார்.