தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதால், அவர்களின் தொகுதிகள் காலியாக உள்ளது. இந்த தொகுதிகளுக்கு செப்டம்பர் 7ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதுபோல, அசாம் மாநிலத்தின் சிப்சாஹர் தொகுதி, மத்திய பிரதேசத்தின் அகர், புல்சந்தர் மற்றும் துன்டலா தொகுதிகள்,கேரளாவில் சவாரா தொகுதி மற்றும் பீகார் மாநிலத்தின் வால்மிகி நகர் பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் தள்ளி வைக்கப்படுவ தாக அகில இந்திய தேர்தல் ஆணையம் தள்ளி வைத்துள்ளதாக அறிவித்து உள்ளது.
இந்த தொகுதிகளில் செப்டம்பர் 7ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டியது இருப்பதால், கொரோனா அச்சுறுத்தல் மற்றும் அசாம் வெள்ளம் காரணமாக, தேர்தலை தள்ளி வைப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உள்ளதால் மக்கள் நலன் கருதி, தேர்தலை தள்ளி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. பின்னர் சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.