சென்னை: தேர்தல் விதிமீறல் புகாரில் கரூர் முதலிடமும், கோவை 2வது இடத்திலும் உள்ளது என தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்ஆணையர் அதிரடியாக மாற்றப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேர்தல் ஆணையர் இவ்வாறு தெரிவித்து உள்ளன.

தமிழகத்தில் ஆவணங்கள் இல்லாததால், இதுவரை  ரூ.265 கோடி மதிப்பிலான பணம், நகை மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தபால் வாக்கு செலுத்த 80 வயதுக்கு மேற்பட்ட 1,51,830 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்றும் மாற்றுத்திறனாளிகளில் 45,568 பேர் தபால் வாக்களிக்க விண்ணப்பித்துள்ளனர் என கூறியவர்,  இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்றார்.