டில்லி

ந்திய தேர்தல் ஆணையம் 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் விறுவிறுப்பைக் காண்பித்து வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு என பல்வேறு குழுக்களை நியமித்து, தேர்தல் பணியைத் தொடங்கி உள்ளன.

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் 13 மாநிலங்களைச் சேர்ந்த 50 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறையவடைய உள்ளது. 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3-ம் தேதி நிறையவடைய உள்ளது.

இதையொட்டி இன்று இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

”மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு பிப்ரவரி 8-ம் தேதி வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 15. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறும். வேட்பாளர்கள் பிப்ரவரி 20-ம் தேதி வரை வேட்புமனுவை திரும்பப்பெறலாம். 

உத்தரபிரதேசம் (10), மலாராஷ்டிரா (6), பீகார் (6), மேற்கு வங்காளம் (5), மத்தியபிரதேசம் (5), குஜராத் (4), கர்நாடகம் (4), ஆந்திரபிரதேசம் (3), தெலுங்கானா (3), ராஜஸ்தான் (3), ஒடிசா (3), உத்தரகாண்ட் (1), சத்தீஷ்கர் (1), அரியானா (1) மற்றும் இமாச்சலபிரதேசம் (1) உள்ளிட்ட இடங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.