புதுடெல்லி :
கொரோனா பரவலுக்கு மத்தியில் முதன் முறையாக பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுடன் , ஒரு மக்களவை தொகுதிக்கும், 59 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஊரடங்கு முழுமையாக விலக்கிக்கொள்ளப்படாத நிலையில், தேர்தல் செலவு உச்சவரம்பை 10 சதவீதம் உயர்த்த மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் அனுமதி கேட்டது.
ஆனால் சட்ட அமைச்சகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை. எனவே, இப்போது உள்ள நடைமுறைப்படியே தேர்தலில் செலவு செய்ய முடியும்.
மக்களவை தேர்தலில் ஒரு வேட்பாளர் 70 லட்சம் ரூபாயும், சட்டசபை தேர்தலில் 28 லட்சம் ரூபாயும் செலவளிக்கலாம்.
-பா.பாரதி