தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 10,36,917 பேர் விண்ணப்பித்த நிலையில் தகுதியான 10,17,456 பேர் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

2022ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு இன்று வெளியிட்டார்.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6,36,25,813 பேர் அதில் 18 -19 வயதுள்ள 4,32,600 பேர் புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதியில் 7,11,755 வாக்காளர்கள் உள்ளனர், தமிழ்நாட்டிலேயே குறைந்த அளவு வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் உள்ளது இங்கு 1,78,517 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
Patrikai.com official YouTube Channel