டெல்லி: ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையம் இன்று அரசியல் கட்சியினர்களுடன் ஆலோசனை நடத்தியது. முன்னதாக, புலம்பெயர்ந்த வாக்காளர்களுக்காக, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தொலை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மாதிரியை காட்சிப்படுத்தியது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள், எதிர்ப்பு தெரிவிக்கும் என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தெரிவித்துள்ளார்,.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது மொத்தமாகவே 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகின. 32.6 சதவீகித வாக்குகள் பதிவாகவில்லை. இதற்குப் புலம்பெயர் தொழிலாளர்களும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. எனவே, புலம்பெயர் தொழிலாளர்கள் இருந்த இடத்திலிருந்தே வாக்களிப்பதற்கு ஏதுவாக ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமைத் தேர்தல் ஆணையம் உருவாக்கியிருக்கிறது.
இந்த இயந்திரத்தை அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், புலம்பெயர் வாக்காளர்களும் வாக்களிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம், ரிமோட் வாக்குப்பதிவு ((ஆர்விஎம் Remove Electronic Voting Machine- ரிமோட் எலெக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்) இயந்திரத்தை உருவாக்கி உள்ளது. இந்த இயந்திரம், இனிமேல் வரும் சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் நடத்த முடிவு செய்துள்ளது. இந்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்பாட்டுக்கு வந்தால், வாக்காளர்கள் எங்கிருந்தாலும் அங்கிருந்தே தங்களது தொகுதியில் வாக்களிக்கக முடியும்.
இந்த முன்மாதிரியான வாக்கு பதிவு இயந்திரம் தொடர்பாக ஜனவரி 16ஆம் தேதி (இன்று) தேர்தலை ஆணையம் டெல்லியில் செயல்முறை விளக்கம் அளிக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அங்கிகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகளுக்கும், 57 மாநில கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு, இந்த ஆலோசனை கூட்டத்தின்போது, ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக செயல்முறை விளக்கம் அளிக்கும் தேர்தல் ஆணையம், இந்த புதிய நடைமுறை தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும் ஆலோசனை மேற்கொள்கிறது. இதற்காக கட்சியினர் டெல்லிக்கு சென்றுள்ளனர்.
மேலும், அரசியல் கட்சிகளிடம் கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஜனவரி 31ஆம் தேதிக்குள் தங்கள் கருத்துகளை தலைமை தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தும், ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்கட்சிகள் ஒருமனதாக எதிர்த்ப்பதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய் சிங் தலைமையில் அக்கட்சியின் சார்பாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. அதில், ஐக்கிய ஜனதாதளம், கம்யூனிஸ்ட் கட்சிகள், தேசிய மாநாட்டு கட்சி, விசிக, திரிணாமூல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கலந்து கொண்டன. இதில், கட்சியின் பிரதிநிதிகள் தங்களது கட்சியின் சார்பாக கருத்துக்களை முன்வைத்தனர். பங்கேற்க இயலாத கட்சிகள் கடிதம் மூலம் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தன. இந்த கூட்டத்தின் முடிவில், ஜனவரி 16 ஆம் தேதி (இன்று) தேர்தல் ஆணையம் கூட்டியிருக்கும் கூட்டத்தில் பங்கேற்று ஆர்விஎம் பயன்படுத்த எதிர்ப்பு தெரிவிப்பது, மீண்டும் எதிர்வரும் 25ஆம் தேதி கூடி அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, தேர்தல் ஆணையத்தின் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை எதிர்க்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திக் விஜய் சிங் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்டு அவர் கூறுகையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வரையறை மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை அனைத்தும் தெளிவாக இல்லை. இதில் மிகப்பெரிய அரசியல் முரண்பாடுகளும் சிக்கல்களும் உள்ளன. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் முன்மொழிவை ஒருமனதாக எதிர்க்க பெரும்பாலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன என்றார். மேலும், ஜனவரி 31 ஆம் தேதிக்குள் எங்களின் பதிலை அளிக்குமாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே எங்கள் பதிலை கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ அனுப்ப ஜனவரி 25 அன்று மீண்டும் சந்திக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.