டெல்லி: தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு தொடர்பாக டெல்லியில் தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது. இதில் எடுக்கப்படும் முடிவைத் தொடர்ந்து, தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையர் அறிவிப்பார்.

தமிழகம், புதுவை, மே.வங்கம், கேரளம், அஸாம் 5 மாநிலங்களின் சட்டப்பேரவை காலம் முடிவடைய உள்ளதால், சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் முன்னெடுத்து வருகிறது. இதுதொடர்பாக அகில இந்திய தேர்தல் ஆணையர்கள் குழு மாநிலங்களுக்கு சென்று, தேர்தலுக்கான பணிகளை நேரடி ஆய்வு செய்ததுடன், மாநில அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியது.

இந்த நிலையில், 5 மாநில தேர்தலுக்கான அட்டவணை அறிவிப்பது குறித்து இன்று தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். இதையடுத்து, ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 3வது வாரத்திலும், வாக்கு  எண்ணிக்கை மே முதல்வாரத்தில் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 2வது வாரத்தில் வெளியாகிறது தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதி….!

[youtube-feed feed=1]