டில்லி:

ணப்புழக்கம் காரணமாக ரத்து செய்யப்பட்ட, வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல்  ஆகஸ்ட் மாதம்5தேதி நடைபெறும் அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெற்று முடிந்த நிலையில், ஏப்ரல் 17ந்தேதி வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல், இந்திய தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.

தேர்தல் சமயத்தில், கடந்த  மார்ச் மாதம்  30ம் தேதி  வேலுர் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் தந்தை துரை முருகனின் வீடு, அதைத் தொடர்ந்து, அவரது நண்பரின் தோட்டம், கதிர் ஆனந்தின் கல்லூரி போன்றவைகளில்  வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர்  நடத்திய சோதனையிபோது,  10 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  காட்பாடியில் சிமெண்ட் குடோனில் வார்டு வாரியாக பணம் பிரித்து வைக்கப்பட்ட கவருடன்,  ரூ.11.53 கோடி வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அங்கு குடியரிசு தலைவர் தேர்தலை செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது, வேலூர் மக்களவை தொகுதிக்கு தேர்தலை, இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி,

வேட்புமனுத் தாக்கல் தொட்ங்கும் நாள்: ஜூலை 11

வேட்புமனு பரிசீலனை:    ஜூலை 18 

வேட்புமனு திரும்பப் பெறும் நாள்:  ஜூலை 23

தேர்தல் வாக்குப்பதிவு  நடைபெறும் நாள் : ஆகஸ்டு 5ந்தேதி

 வாக்கு எண்ணிக்கை:  ஆகஸ்ட் 9ம் தேதி