டில்லி

டைபெற உள்ள மக்கலவை தேர்தலை ஒட்டி தேர்தல் ஆணையம் டிவிட்டரில் கணக்கு தொடங்கி உள்ளது.

அரசியல் கட்சிகள், அரசியல் அலுவலகங்கள், தலைவர்கள், கலைத் துறையினர் உள்ளிட்ட அனைவரும் டிவிட்டரில் கணக்கு வைத்துக் கொண்டுள்ளனர். தங்களது கருத்துக்கள மட்டுமின்றி முக்கிய அறிவிப்புக்களையும் பலர் டிவிட்டரில் பதிந்து பொது மக்களுக்கு தெரிய வைக்கின்றனர்.

டிவிட்டரில் அக்கவுண்ட் இல்லாத அரசுத் துறைகள் மிகக் குறைவாகவே உள்ளன. இதில் இந்திய தேர்தல் ஆணையமும் ஒன்றாகும்,   நடைபெற உள்ள மக்களவை தேர்தலை முன்னிட்டு நேற்று முன் தினம் தேர்தல் ஆணையம் தனது டிவிட்டர் கணக்கை தொடங்கியது.

தற்போதுள்ள நிலையில் இளைஞர்கள் மத்தியில் டிவிட்டருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. நாட்டில் இளைய தலைமுறை வாக்காளர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனவே டிவிட்டர் கணைக்கை ஆணையம் தொடங்கி உள்ளது. தேர்தல் விழிப்புணர்வு பிரசாரங்களை டிவிட்டர் மூலம் தேர்தல் ஆணையம்  வழங்க உள்ளது.

அது மட்டுமின்றி 12 மொழிகளில் மக்களவை தேர்தல் குறித்த ஹேஷ்டாகுகளை ஆணையம் அறிமுகம் செய்துள்ளது. அத்துடன் இந்திய பாராளுமன்ற கட்டிடத்தின் புகைப்படத்தைக் கொண்டு எமோஜி ஒன்றையும் ஆணையம் வெளியிட்டுள்ளது.

டிவிட்டர் இந்தியா தேர்தல் ஆணையம் டிவிட்டரில் கணக்கு தொடங்க்யதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.