அதிமுக அணிகளுக்கு தொப்பி, இரட்டை மின்கம்பம் ஒதுக்கியது தேர்தல் கமிஷன்!

Must read

டில்லி,

திமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன்  முடக்கியது.

அதைத்தொடர்ந்து இரு அணிகளும் வெவ்வேறு பெயர்களையும், சின்னங்களையும் வேண்டி தேர்தல் கமிஷனில் மனு கொடுத்திருந்தனர்.

அதையடுத்து இன்று தேர்தல் கமிஷன் இரு அணிகளுக்கான கட்சியின் பெயரையும், சின்னத்தை யும் ஒதுக்கீடு செய்துள்ளது.

ஓபிஎஸ் அணியினருக்கு, அதிமுக புரட்சித்தலைவி அம்மா என்றும், சசிகலா அணியினருக்கு அதிமுக அம்மா என்றும் பெயர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், ஓபிஎஸ் அணியினருக்கு தேர்தல் சின்னமாக இரட்டை மின்கம்பமும், சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும் ஒதுக்கி உள்ளது.

இரட்டை இலை போன்று இருப்பதால் மின்கம்பத்தை தேர்வு செய்துள்ளது ஓபிஎஸ் அணி.

தேர்தல் சின்னம் ஒதுக்குவது குறித்து காலையில் இருந்தே பல பரபரப்பு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்தது. இரு அணிகளும் சேவல் சின்னத்துக்கு போட்டி போடுகிறார்கள் என்றும், அதைத்தொடர்ந்து சசி அணிக்கு பேட் ஒதுக்கப்பட்டுள்ளது என்று முதலில் செய்தி வெளியானது.

பின்னர் சற்று நேரம் கழித்து ஆட்டோ ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இறுதியில் சசி அணியினர் தொப்பி சின்னத்தையே தேர்வு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

 

More articles

Latest article