டெல்லி: தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு கொட்டும் முரசு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையமும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. கட்சிகளுக்கு சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

இந்நிலையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்துக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்தலில் போட்டியிட கொட்டும் முரசு சின்னத்தை ஒதுக்கி தலைமை  தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேமுதிக தொடங்கிய காலத்தில் இருந்து கொட்டும் முரசு சின்னத்தில்தான் போட்டியிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

[youtube-feed feed=1]