கவுகாத்தி: அசாம் சட்டசபை முதல்கட்ட தேர்தலில் மொத்தம் 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் கூறி உள்ளது.

126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் மார்ச் 27ம் தேதி 47 தொகுதிகளுக்கு நடக்கிறது. 2ம் கட்டமாக ஏப்ரல் 1ம் தேதி 39 தொகுதிகளுக்கும், 3ம் கட்ட தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

மார்ச் 27-ம் தேதி நடைபெறும் முதல்கட்ட தேர்தலில் போட்டியிடும் வகையில் வேட்புமனு தாக்கல் சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மொத்தம் 173 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக அம்மாநில தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் சர்பானந்தா சோனாவால் மஜூலி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.