தேர்தல் 2016: ரசிகர்கள் ஆதரவு யாருக்கு?

Must read

a
தமிழகத்தைப் பொறுத்தவரை, சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு முன்பே அரசியலில் திரைத்துறையினரின் தாக்கம் இருந்திருக்கிறது. பிரபல நடிகர் என். எஸ்.கே. காங்கிரஸ் ஆதரவாளராக இருந்து அக் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் செய்திருக்கிறார். பின்னாட்களில் எம்.ஆர் ராதா உட்பட பலர்  வெளிப்படையாக கட்சிகளை ஆதரித்திருக்கிறார்கள்.
அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா என்று பல முதல்வர்கல் திரைத்துறையுடன் தொடர்புள்ளவர்கள்தான.
தேனி தொகுதியில் திமுக சார்பில் 1962ம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார்  எஸ்.எஸ்.ராஜேந்திரன்.  தேர்தலில் நின்று வென்ற தமிழகத்தின் முதல் நடிகர் இவர். அதே போல, 1960களில் திமுக சார்பில்  எம்.எல்.சி ஆன முதல் நடிகர்,நடிப்பிசை புலவர் கே.ஆர்.ராமசாமி.
எம்.ஜி.ஆருக்கு பிறகு மிகக் குறைந்த காலம் முதல்வராக இருந்த அவரது மனைவி ஜானகியும் திரைத்துறையைச் சேர்ந்தவர்தான். அதன் பிறகு 91ல் வெற்றி பெற்ற ஜெயலலிதாவும் முன்னாள் நடிகையே.
1996ல், நடிகர் ரஜினிகாந்த், திமுக – தமாகா கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். அக் கூட்டணி வென்றதும், ரஜினியாலேயே வெற்றி கிடைத்தது என்று அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கினர்.
இதையடுத்து மேலும் பல நடிகர்களுக்கு அரசியல் ஆசை வந்தது. (அதற்கு முன்பே பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் கட்சி துவக்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.)
ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக வந்தவர்களில் விஜய், அஜீத் ஆகியோர் பெரும் அளவில் ரசிகர்களைக் கொண்டிருப்பதால் அவர்களுக்கும் அரசியலுக்கும் முடிச்சு போடப்பட்டது. இவர்களில் அஜீத், அரசியல் ஆசை இல்லை என்பதைச் சொல்லிவிட்டாலும், அவரை ரசிகர்கள் விடுவதாக இல்லை. “வருங்கால முதல்வரே” என்று போஸ்டர் போட்டபடிதான் இருக்கிறார்கள்.
விஜய், தனது அரசியல் ஆசையை பலமுறை வெளிப்டுத்திவிட்டார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுலை சந்தித்தார். பிறகு பிரதமர் (வேட்பாளராக கோவை வந்த) மோடியை சந்தித்தார்.
“கொள்கை” என்று ஏதும் இல்லாவிட்டாலும், ஏதாவது கட்சியில் முக்கியத்துவம் பெற வேண்டும் என விஜய் ஆசைப்பட்டார். அதற்கான “பலனை”யும் அனுபவித்தார். அவரது கத்தி திரைப்படம் வெளியிடுவதில் பிரச்சினை ஏற்பட்டபோது, தமிழக அரசு.. அதாவது முதல்வர் ஜெயலலிதா நடந்துகொண் விதம், விஜய்யை கதிகலங்க வைத்தது. ஆகவே தற்காலிகமாக தனது அரசியல் ஆசையை மறைத்துவைத்திருக்கிறார்.
இவர்களுக்கிடையே, தைரியமாக அரசியலுக்கு வந்து கட்சி துவக்கி எதிர்க்கட்சிதலைவராகவும் ஆகவிட்ட விஜயகாந்த் ஒருபக்கம்.
இவர்களில் விஜயகாந்த் அரசியல் நிலைப்பாடு வெளிப்படையாகத் தெரிந்துவிட்டது.
மக்கள் நலக்கூட்டணி மற்றும் த.மா.கா.வுடன் கூட்டணி வைத்து “மாற்று வேட்பாளர்” தானே என்று களம் இறங்கியிருக்கிறார்.
நேரடியாக அரசியலுக்கு வராத.. பிரபல நடிகர்கள் தங்கள் ரசிகர்களுக்கு எந்தமாதிரியான சிக்னல் கொடுத்திருக்கிறார்கள்.. அவர்களது ஆதரவு யாருக்கு…?
(அடுத்த பகுதியில்…)

More articles

Latest article