சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வித்தியாசமான மனு ஒன்றை அளித்திருக்கிறார் சென்னை வடபழனி நேதாஜி தெருவில் வசிக்கும் கந்தசாமி என்பவர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து காப்பாற்றி 66 வயதான அவரை முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும் என்கிறது அந்த மனு.
“ நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கபாலி படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி, போலியான உந்துதலை ஏற்படுத்தி, படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டினார்கள். இதனால் சென்னை அசோக் நகரில் உள்ள காசி தியேட்டருக்கு சென்று ரூ.1200 கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பார்த்தேன்

எதிர்பார்ப்பிற்கு மாறாக சரியான மொக்கை படமாக எடுத்து இயக்குனர் ரஞ்சித்தும், ரஜினியும் என்னை ஏமாற்றி விட்டார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். மேலும்ம், 66 வயது சீனியர் சிட்டிசனான ரஜினியை சண்டைக்காட்சிகளில் நடிக்க வைத்து தயாரிப்பாளரும், இயக்குனரும் சித்ரவதை செய்துள்ளனர்.
சீனியர் சிட்டிசன்களுக்கு தமிழக அரசு பல்வேறு உதவிகளை அளித்து வரும் நிலையில், தமிழக காவல்துறை தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து ரஜினியைக் காப்பாற்றி முதியோர் இல்லத்தில் சேர்த்து ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அந்த புகார் மனுவில் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
இது எப்படி இருக்கு?
Patrikai.com official YouTube Channel