ஆதரவின்றி சாலையோரம் வாழ்ந்து வந்த வயதான ஆசிரியை மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த மாணவர்களின் நெகிழ்ச்சி சம்பவம் குறித்த தகவல் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆங்கிலத்தில் பேசி அசத்திய பாட்டி குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.

இதைப் பார்த்த சிலர், அந்த பாட்டி தங்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்த ஆசிரியர் என்பதை அறிந்த அவர்கள் அவர் ஆதரவின்றி சாலையோரம் வசித்து வரும் அவலத்தைக்க கண்டு வேதனை அடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அந்த பாட்டியின் இருப்பிடத்தை அறிந்து அங்கு சென்ற அந்த மாணவர்கள் அவரை அங்கிருந்து மீட்டு முதியோர் இல்லத்தில் தங்கவைத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.