பரந்தூர்
பரந்தூரில் விமான நிலையம் அமைவதை எதிர்த்து 2 ஆண்டுகளாக போராடி வரும் ஏகனாபுரம் மக்கள் தமிழகத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளனர்.

சென்னை நகரில் 2வது பசுமை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமையவுள்ளதால் இதற்காக பரந்தூரை சுற்றியுள்ள 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஏகனாபுரம் என்ற கிராமத்தில் உள்ள குடியிருப்புகள், நிலங்கள் என மொத்தமாக கையகப்படுத்தப்பட உள்ளன. எனவே இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கிராம மக்கள் சுமார் இரண்டு ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கிராம மக்கள் இதனால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சுமார் 690 நாட்களாக போராடி வரும் ஏகனாபுரம் கிராம மக்கள் தீர்வு கிடைக்காததால், வாழ்வதற்கு தஞ்சம் கேட்டு ஆந்திர மாநிலத்தை அணுக முடிவு செய்துள்ளனர் இதையொட்டி சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளனர்.
சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க ஒரு குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். விமான நிலைய திட்டத்தை கைவிட மறுத்து நிலம் எடுப்பு பணிகளை மேற்கொள்வதால், கிராம மக்கள் தமிழக அரசுக்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
[youtube-feed feed=1]