கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அதிபர் விடுதலை

கெய்ரோ:

எகிப்த் நாட்டின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் கொலை மற்றும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 6 வருட சிறைவாசத்துக்கு பின் அவர் வீடு திரும்பியுள்ளார்.

எகிப்த் முன்னாள் அதிபராக இருந்தவர் ஹோஸ்னி முபாரக். கடந்த 2011ம் ஆண்டு எகிப்தில் நடந்த கிளர்ச்சி உலகையை திரும்பி பார்க்க வைத்தது. 18 நாட்கள் நடந்த இந்த போராட்டதில் ஈடுபட்டவர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்த குற்றச்சாட்டுக்கள் காரணமாக அதிபர் பதவியில் இருந்து ஹோஸ்னி தூக்கி எறியப்பட்டார். இதன் மூலம் அவரது 30 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு வந்தது.

பதவி இழந்த 2 மாதங்கள் கழித்து ஊழல் மற்றும் கொலை குற்றச்சாட்டுக்கள் காரணாக ஹோஸ்னி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 88 வயதாகும் அவர் மாடி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் கொலை வழக்கில் தனக்கு தொடர்பு இல்லை என்று நிரூபித்த அவர் இன்று விடுதலை செய்யப்பட்டார். இதை அவரது வக்கீல் தெரிவித்தார். கெய்ரோவில் உள்ள மாடி மருத்துவமனையில் இருந்து வெளியேறிவிட்டார். தற்போது அவர் ஹெலிபோலிஸ்ஸில் உள்ள தனது இல்லத்தில் இருப்பதாகவும் வக்கீல் பரீத் இல் தீப் தெரிவித்தார்.

தற்போது அவர் வீடு உள்ள பகுதியின் அருகில் தான் அவர் அதிபராக இருந்த போது வசித்த அரண்மனை இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
Egypt’s former leader Mubarak freed, six years after overthrow: Lawyer