கோவிட் -19 பாதிப்பிற்கு பின் குழந்தையின் இதயத்தில் ஏற்படும் விளைவுகள் குறித்து கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளக்கம் அளித்துள்ளது.
உயிரிக்கொல்லி நோயான கொரோனா தொற்றை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் திணறி வருகிறது. கோவிட் -19 பாதிப்பு மனித உடல் ஆரோக்கியத்தில் கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அவ்வப்போது உருமாறிய நிலையில் பரவி வரும் தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ள, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும் . ஆனால், குழந்தைகளுக்கு தேவையான தடுப்பூசிகள் இன்னும் முழுமையாக ஆய்வு முடிந்து பயன்பாட்டுக்கு வரவில்லை. இருந்தாலும் கோவிட்டால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பது குறித்து கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 1975 இல் தொடங்கப்பட்ட ஒரு புகழ் பெற்ற மருத்துவ நிறுவனம். கோயம்புத்தூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை பல வழிகளிலும் சேவைகளாலும் மருத்துவ வரலாற்றின் ஒரு பகுதியாக மாறியுள்ளது. உண்மையில், இது நவீன இந்தியாவின் சுகாதாரப் புரட்சியின் ஒருங்கிணைந்த பகுதியாகும். எஸ்என்ஆர் சன்ஸ் தொண்டு நிறுவனத்தால் நிறுவப்பட்டு நடத்தப்படும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறது. உயிர்க்கொல்லி நோய் பாதிப்புகள் முதல் அன்றாட வியாதிகளுக்கான சிகிச்சைகள் வரை, அதிநவீன தொழில்நுட்பம், அதிநவீன அறுவை சிகிச்சை மற்றும் மருத்துவ நுட்பங்களைப் பயன்படுத்தி அனைத்து தரப்பு நோயாளிகளுக்கும் சிறந்த மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த மருத்துவமனை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களுக்கு ஏற்படும் பின்விளைவுகளை தடுக்கும் வகையில், சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி, குழந்தைகளுக்கு ஏற்படும் இதயபாதிப்பு குறித்தும், அதில் இருந்து குழந்தைகளை தடுக்க எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்தும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவர்கள் 24 மணி நேரம் சேவை வழங்கி வருகின்றனர்.
இம்மருத்துவமனை உலக இருதய தினத்தை முன்னிட்டு நேற்று (29ந்தேதி) மாரடைப்பு அவசர சிகிச்சை மற்றும் இருதய சிறு துவார அறுவை சிகிச்சைக்கான இணையவழி கருத்தரங்கையும் நடத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
கோவிட்-19 என்பது வயது வித்தியாசமின்றி அனைவரையும் பாதிக்கும் ஒரு கொடிய வைரஸ் என்பதை நாம் அறிவோம். சிலர் லேசாக பாதிக்கப்படலாம், சிலர்க்கு மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். குழந்தைகளும் கோவிட்-19 வைரஸ் மூலம் பாதிக்கப்பட வாய்ப்புகள் உண்டு. கோவிட்-19 வைரஸ் பாதிக்கப்பட்ட தாய் மூலம் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படலாம்.
கோவிட் -19 பெரியவர்களை விட குழந்தைகளுக்கு அதிக பாதகமான பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருதய அமைப்பு மற்றும் சுவாச அமைப்புகளின் செயல் திறன் கோவிட் -19 பாதிப்பிற்கு பின் கடுமையாக பாதிப்படைகிறது. குழந்தைகளில் நோயெதிர்ப்பு சக்தி போதிய வளர்ச்சியடையாததால், உடலில் கோவிட் -19 வைரஸ் வேகமாக பரவுகிறது. சில வாரங்களுக்குள் கொரோனா வைரஸ் பாதிப்பு தணிந்தாலும், அதன் பாதிப்பினால் ஏற்படும் பின்விளைவுகள் மேலும் சிறிது காலம் நீடிக்கும்.
கோவிட்-19 வைரஸ் மனித உடலில் நுரையீரல், மூளை மற்றும் இதயம் போன்றவரை வெகுவாக பாதிக்கிறது. இது இதயத் தசைகளை பாதிப்பது மட்டுமில்லாமல் இதயத் துடிப்பை குறைக்கவும் செய்கிறது. இந்த தொற்றுநோயை விரைவில் கண்டறிந்து குணம் அடைந்த பிறகும் பாதிப்படைந்தவர்களும், குறைந்தது ஒரு மாதத்திற்குப் பிறகு அதன் பாதிப்பின் பின்விளைவுகளை உணரலாம்.
கோவிட்-19 பாதிப்பு பல்வேறு காலங்களில் பல்வேறு வகையான மருத்துவப் பிரச்சினைகளின் கலவையாக கொண்டிருக்கும். குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் கோவிட் 19 அறிகுறிகள் ஒரே மாதிரியாக இருக்கும்.
குழந்தைகளில் கோவிட்-19 பாதிப்பிற்கு பின் ஏற்படும் விளைவுகள் என்பது என்பது மல்டி-சிஸ்டம் அழற்சி நோய்க்குறி -MIS-C எனப்படுகிறது. (https://en.wikipedia.org/wiki/Multisystem_inflammatory_syndrome_in_children) இது உயிருக்கு ஆபத்தானது, ஏனெனில் இது இருதய அதிர்ச்சியையும் மரணத்தையும் ஏற்படுத்துகிறது. மேலும் இதயம் சாதாரணமாக ஓய்வெடுப்பதையும், சரியாக துடிப்பதையும் தடுக்க செய்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை, குறுகிய மற்றும் நீண்ட காலத்திற்கு நோய்களை வெல்லும் திறனைக் கொண்டிருப்பதே நாம் முக்கிய குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் (https://www.sriramakrishnahospital.com) குழந்தை இருதயநோய் நிபுணர்கள் கொடிய வைரஸ் மற்றும் அதன் சிக்கல்களை எதிர்கொள்ள சிறந்த மருத்துவ சிகிச்சை/சேவைகளை வழங்கி வருகிறார்கள்.
கோவிட் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பாக, கோயம்புத்தூரில் உள்ள சிறந்த குழந்தை இருதயநோய் நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையை எந்த நேரத்திலும் தொடர்புகொள்ளலாம். (https://www.sriramakrishnahospital.com/minor-department/paediatric-cardiac-surgery/) சேவைபுரிகின்றனர்.
தொலைதூரத்தில் உள்ளவர்கள், ஆன்லைன் மூலமும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்த உடனடி ஆலோசனை பெறும் வகையில் டிஜிட்டல் சேவைகளையும் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வழங்கி வருகிறது. இம்மருத்துவமனையின் மருத்துவர்கள் ஆன்லைன் வீடியோ கால் (telemedicine.sriramakrishnahospital.com) மூலம் உங்களுக்கு தேவையான ஆலோசனையை வழங்குகிறார்கள்.
பொதுமக்களுக்கு உலகளாவிய அளவுகோல்களுக்கு இணையான பயனுள்ள சிகிச்சையை வழங்க . ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை டாக்டர்கள் 24 மணி நேரமும் சேவையாற்றி வருகின்றனர். மக்களுக்குத் தேவையான நேரத்தில் தேவையான மருத்துவ சேவைகள் கிடைப்பதை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்பொழுதும் உறுதி செய்கிறது.
கொரோனா தொற்று (கோவிட் 19) குறித்த தகவல்களை பெற உடனே கோவை ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனையை தொடர்பு கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்.
https://www.youtube.com/c/SriRamakrishnaHospital
https://www.facebook.com/SriRamakrishnaHospital
https://en.wikipedia.org/wiki/Sri_Ramakrishna_Hospital