
சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. டீஸருக்கு அமோக ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டார் சுசீந்திரன்.
பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது இப்படம் .
இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிள் தமிழன் பாட்டு வெளியானது. அனந்து, தீபக் மற்றும் தமன் பாடிய இந்த பாடல் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். சிலம்பரசன் மற்றும் தமன் கூட்டணியில் வெளியான வாலு மற்றும் ஒஸ்தி போன்ற பாடல் ஆல்பம் அனைத்தும் ஹிட் என்பதால் மிகுந்த ஆவலில் உள்ளனர் ரசிகர்கள்.
Patrikai.com official YouTube Channel