
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியான ‘ஈஸ்வரன்’ படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்த படத்தில் சிம்புவுடன் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஈஸ்வரன் படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்கியுள்ளார்.
இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் டெலிகிராம் மற்றும் பிற பைரசி வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சி அளித்துள்ளது. அதோடு சமூக வலைதளங்களில் அதன் லிங்க் பகிரப்பட்டதால், சிம்பு உள்ளிட்ட படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளனர்.
Patrikai.com official YouTube Channel