சென்னை:
தமிழக அரசின் ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்படும் ஏற்கன அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சோதனை ஒளிபரப்பு அரசு கேபிள் வாயிலாக தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஆண்டு (2018) அக்டோபர் 30ந்தேதி செய்தியளார்களிடம் பேசும்போது, தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு என தனி டிவி சேனல் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் 2019 ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது தொடங்கப்படும் என கூறியிருந்தார்.
இந்த நிலையில், கோடை விடுமுறை முடிந்தது தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில் அரசு கேபிள் டிவியில் கல்வி தொலைக்காட்சி சோதனை முறையில் ஒளிபரப்பு தொடங்கியது.
தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளை பிரத்யேகமாக ஒளிபரப்பி, மாணவர் சமுதாயத்துக்கு வழிகாட்டும் வகையில், ‘கல்வி தொலைக்காட்சி’ தொடங்கப்பட்டுள்ளது.
அரசு கேபிளில் அலைவரிசை எண் 200-ல் பள்ளி கல்வித்துறையின் ‘கல்வி தொலைக்காட்சி’யின் சோதனை ஒளிபரப்பு தொடங்கியுள்ளது. பள்ளி கல்வித்துறையின் புதிய திட்டங்கள், சுற்றறிக்கைகள், மாணவர்களின் கண்டுபிடிப்புகள், கல்வியாளர்களின் கலந்துரை யாடல்கள், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான செயல்வழி கற்றல், பாடல்கள் மூலம் பாடங்களை புரிய வைத்தல் குறித்த பதிவுகள் ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.