சென்னை: ஒருவரிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து கல்வி மட்டுமே என்றும்,  “பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும்”  என தனியார் பள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ், திராவிட அரசனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார்.

சென்னை பள்ளிக்கரணையில் டிஏவி பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியி உரையாற்றிய முதல்வர் , பள்ளி, கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் புத்துணர்ச்சி பெருகிறேன். நான் பிறந்து வளர்த்த கோபாலபுரத்தில் டிஏவி பள்ளி முதன் முதலாக தொடங்கப்பட்டது. சென்னையில் அரை நூற்றாண்டுகளுக்கு மேலாக கல்வி சேவை வழங்கி வருகிறது டிஏவி குழுமம். டிஏவி குழுமத்தில் 30,000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தாய்மொழி கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டும். தாய்மொழி வழிக் கல்விக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் கல்வி நிறுவனங்கள் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியதுடன், பள்ளிக்கல்வி திட்டங்களுக்கு அழகிய தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.

தாய்மொழி பற்றும் தாய்நாடு பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக முக்கியம். போட்டிகள் நிறைந்த உலகத்தில் மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி என்பதே இருளில் இருந்து ஒளிக்கு கொண்டு செல்வது தான். கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை தவிர்க்க  நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளிக் கல்விக்கு மட்டுமல்லாமல் கல்லூரி கல்விக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.  மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து என்றால் கல்வி மட்டும் தான். அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி கொடுத்துள்ளோம் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய கல்விஅமைச்சர் அன்பில் மகேஸ், திராவிட அரசனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்று புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசியர்,  பிரதமர் முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சு வரலாற்று சிறப்பு மிக்க பேச்சு, இது இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறி இருக்கிறது. இந்தியாவின் ஜிடிபியில் 6 சதவீத ஜிடிபி பங்களிப்பு தரும் தமிழகத்திற்கு குறைவாகவே மத்திய அரசின் நிதி ஒதுக்கப்படுகிறது என்பதை வலியுறுத்தினார்.

நிதி நெருக்கடியிலும் பள்ளிக் கல்வித்துறைக்கு 36 , 895 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாடர்ன் தமிழகத்தின்  தந்தை கருணாநிதி. கொள்கையில் சமரசமின்றி உழைக்கும் முதலமைச்சர் creator of modern tamilnadu -க்கு . அனைத்திற்கும் அடிப்படை பள்ளிக்கல்விதான் , பள்ளியே கோயில் , அதில் பயிலும் மமாணவர்களே தெய்வம் என்று முதல்வர் செயல்பட்டு வருகிறார் . மாணவர்களின்  மதிப்பெண்ணை மட்டுமே வைத்து எடைபோடாமல் , அவர்களது  தனித்திறனை வெளிக்கொண்டுவர அரசு உதவும். அறம் சார்ந்த கல்வி முறையை உருவாக்கி , மாணவர்கள் படித்து முடித்த பிறகு பொருள் ஈட்டவும் உதவும் விதமாக கல்வி இருக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.