சென்னை:

டப்பாடி பழனிச்சசாமி இன்று மாலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ள நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவிடம் ஒப்பபடைத்தார்.

ஏற்கனவே இருந்த ஓபிஎஸ் மற்றும் மாபா பாண்டியராஜன் தவிர பழைய அமைச்சர்களுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என யூகங்கள் வெளியாகி உள்ளது.

கவர்னர் பதவி ஏற்க அழைத்ததை தொடர்ந்து,  போயஸ் தோட்ட இல்லத்தில் சசிகலா உறவினர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். அப்போது தமிழக புதிய அமைச்சராக யார் யார் பதவி ஏற்கலாம் என பட்டியல் தயார் செய்யப்பட்டது. இறுதி செய்யப்பட்ட புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநரிடம் எடப்பாடி  வழங்கினார். அவருடன் கட்சியின் துணைப்பொதுச்செயலாளரான டி.டி.வி.தினகரனும் சென்றார்.

புதிய அமைச்சரவை பதவியேற்கும் விழா மாலை 4 மணிக்கு ராஜ்பவனில் நடைபெற உள்ளது.