சென்னை:
திமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் பங்கேற்க புறப்பட்டார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி வழக்கில் நள்ளிரவே விசாரணைக்கு வந்தது. விடிய விடிய நடைபெற்ற விசாரணையில், அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், பொதுக்குழுவை நடத்த தடையில்லை என உத்தரவிட்டனர்.
அதே நேரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்களைத் தவிர, ஒற்றைத் தலைமை தொடர்பான தனித் தீர்மானத்தை நிறைவேற்ற நீதிபதிகள் தடை விதித்தனர்.

நீதிபதிகளின் தீர்ப்பை தொடர்ந்து இன்று நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்பார் என துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கிளம்புவதற்கு முன்பு தனித்தனியே ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பூஜை செய்தனர்.

அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள வானகரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.