கோபி: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு, அதில் ஏ1 குற்றவாளி எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டை யன், அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என கூறினார்.

எடப்பாடிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்துவந்தது. இதன் எதிரொலியாக, கோவையில் கடந்த பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் பாராட்டு விழாவை செங்கோட்டையன் புறக்கணித்தார். அதிமுக பேனரிலல், முன்னாள் முதலமைச்
சர் ஜெயலலிதாவின் புகைப்படம் இல்லை என்றும் குற்றம் சாட்டினார். இதையடுத்து இருவருக்கும் இடையே பூசல் அதிகரித்து வந்தது.
இந்தநிலையில், கடந்த செப்டம்பர் 5ந்தேதி அன்று செய்தியாளர்களிடம் பேசிய அ.தி.மு.க-வில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எடப்பாடிக்கு கெடு விதித்தார். மேலும், அதிரடியாக டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்களை சந்தித்தார். ஆனால், செங்கோட்டையனின் கோரிக்கையை எடப்பாடி ஏற்க மறுத்தார்.
இதனால், மேலும் அதிருப்தி அடைந்த செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட டிடிவி, ஒபிஎஸ் போன்றோர்களுடன் நடட்பு பாராட்டினார். மேலும் திமுக தலைமையுடனும் நட்பு பாராட்டியதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு மத்தியில் அக்டோபர் 30ந்தேதிஅன்று நடைபெற்ற தேவர் ஜெயந்தியின் போது செங்கோட்டையன், ஓ.பன்னீர் செல்வம் உடன் ஓரே காரில் பயணித்த நிலையில், அங்கு வந்த டிடிவி தினகரனையும் சந்தித்து பேசினார். பின்னர், மூன்று பேரும்ஒன்றாக சேர்ந்து, தேவர் சமாதியில்மரியாதை செலுத்தினர். அதையடுத்து, அங்கு வந்தசசிகலாவையும் சந்தித்துபேசினர். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ஓபிஎஸ், டிடிவி, செங்கோட்டையன் ஆகிய 3 பேருக்கும் ஒன்றாக பேட்டி அளித்தனர். அப்போது எடப்பாடியை கடுமையாக சாடினர். இதையடுத்து, அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார்.
செங்கோட்டையன் அ.தி.மு.க-விற்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களை விதிகளை மீறி சந்தித்ததால் செங்கோட்டையன் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார். இதனிடையே நீக்கம் குறித்து இன்று காலை 11 மணியளவில் கோபிச்செட்டிப்பாளையம் கட்சி அலுவலகத்தில் தெளிவான விளக்கங்களை செய்தியாளர்களை சந்தித்து அளிக்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
அன்படி இன்று காலை 11 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன் கூறியதாவது,
”1975-ல் கோவையில் நடைபெற்ற அதிமுகவின் முதல் பொதுக்குழுவில் பங்கேற்றேன். பொதுக்குழுவைச் சிறப்பான முறையில் நடத்தியதற்காக எம்.ஜி.ஆரிடம் பாராட்டுகளைப் பெற்றவன்.
ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன். தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன்.
2019, 2021, 2024-ல் எடப்பாடி எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியது. தோல்வியை இல்லை என்ற நிலையில் இருந்தவர் எம்.ஜி.ஆர். எடப்பாடிக்கு பரிந்துரைக் கடிதம் வெளியிட்டவன் நான்தான்.
தி.மு.க-விற்கு நான் உறுதுணையாக இருப்பதாக எடப்பாடி கருத்தை வெளியிட்டு இருக்கிறார். திமுகவின் பி டீம் என்று சொல்லியிருக்கிறார். பி டீம் யார் என்பது நாடறியும்.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-விற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன்.
அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டி.டி.வி, ஓ.பி.எஸை சந்தித்தேன். தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கியது”
அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக 2 முறை கிடைத்த வாய்ப்புகளை விட்டுக் கொடுத்தேன். 2019, 2021, 2024-ல் எடப்பாடி எடுத்த முடிவுகளால் அ.தி.மு.க தோல்வியைத் தழுவியது. தோல்வியை இல்லை என்ற நிலையில் இருந்தவர் எம்.ஜி.ஆர். எடப்பாடிக்கு பரிந்துரைக் கடிதம் வெளியிட்டவன் நான்தான்.
தி.மு.க-விற்கு நான் உறுதுணையாக இருப்பதாக எடப்பாடி கருத்தை வெளியிட்டு இருக்கிறார். பி டீம் என்று சொல்லியிருக்கிறார். பி டீம் யார் என்பது நாடறியும். இன்று வரையில் நான் பி டீமில் இல்லை ஏ1-ல் அவர் இருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க-விற்கு வருவதற்கு முன்பே நான் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவன் நான். கட்சியில் சீனியர் என்ற முறையில் எனக்கு நோட்டீஸாவது அனுப்பியிருக்க வேண்டும். அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் சிந்தும் நிலையில் உள்ளேன். அ.தி.மு.க-வை ஒருங்கிணைக்கவே தேவர் ஜெயந்தியில் டி.டி.வி, ஓ.பி.எஸை சந்தித்தேன். தேவர் ஜெயந்தியில் பங்கேற்றதற்கு கிடைத்த பரிசுதான் கட்சியில் இருந்து நீக்கியது” என்றார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்ற பிறகு, நடைபெற்ற எந்தத் தேர்தல்களிலும் வெற்றி பெறவில்லை, தொடர் தோல்வியைச் சந்தித்துள்ளோம் என்றவர், முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் தோல்வியையே காணாதவர், ஜெயலலிதா ஒரு முறை தோற்றால் மறுமுறை வெற்றியைக் காண்பார். ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு எந்தவொரு தேர்தலிலும் அதிமுக வெற்றி பெறவில்லை.
அதிமுக பிளவுபட கூடாதென்று 2 முறை எனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுக்கொடுத்தேன் என்றவர், சறுக்காமல், வழுக்காமல் இந்த இயக்கத்திற்கு விசுவாசமான தொண்டனாக இருப்பதால்தான் இத்தனை பொறுப்புகளை நான் வழங்கியிருக்கிறேன் என்று அம்மா கூறியுள்ளார். இ ந்த இயக்கம் வலிமையோடு இருக்க வேண்டும் என்பதற்காக நான் அயராது பணியாற்றி வருகிறேன்.
“அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, கண்ணீர் வடிக்கிறேன். ஜெயலலிதா இறப்புக்கு பிறகு எல்லோரும் ஒருங்கிணைந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். அனைவரையும் ஒன்றிணைக்கும் கருத்தை எடப்பாடி பழனிசாமி ஏற்காததால்தான் கடந்த 5ம் தேதி மனம் திறந்து பேசினேன். தொடர் தோல்வியால்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அனைவரையும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.
அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி வந்தேன். கட்சி உடைந்துவிடக் கூடாது என்றுதான், பத்து நாள்களுக்குள் பேச்சு தொடங்குங்கள் என்று வலியுறுத்தினேன். அப்போதே, கெடுவா என்று கேட்டீர்கள். இல்லை என்றேன். 10 நாள்களுக்குள் முடிவெடுங்கள். ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதம் எடுத்துக் கொள்ளலாம். யாரிடமாவது கருத்தும் கேளுங்கள். ஆனால், யாரைச் சேர்ப்பது என்பதை பொதுச் செயலாளர் முடிவு செய்துகொள்ளலாம் என்று வலியுறுத்தினேன்.
நான் விதித்தது கெடு அல்ல, பேசி முடிவெடுக்க வேண்டும் என்றுதான் என் கருத்தை முன் வைத்தேன். ஆனால் கெடு விதித்து விட்டார் என்றுதான் செய்திகள் வெளியாகின. இயக்கம் ஒன்று சேர வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் அதிமுக தொண்டர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்டு என் கருத்தைச் சொன்னேன். நமது இயக்கத்தை வலிமையுடன் எடுத்துச் செல்ல வேண்டும் என்தற்காக கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டது.
ஆனால், அதன் பிறகு எனது கட்சிப் பொறுப்புகள் நீக்கப்பட்டன. கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பைத் தவிர மற்றவற்றிலிருந்து நீக்கப்பட்டேன். அதிமுக புத்துயிர் பெற்று தமிழகத்தில் நல்லாட்சி ஏற்படுத்தப்பட வேண்டும். ஜெயலலிதா அவர்கள் தமிழகம் வலிமையோடு இருக்கும் என்று சொன்னார்களே அதனை நிறைவேற்றவே என எனது கருத்தை சொன்னேன். ஒருவேளை, 2026ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்பே சொல்லவில்லை என்ற கேள்வி எழும் என்பதால்தான் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னேன். ஆனால், என்னைத்தான் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கினார்கள் என்றவர், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை குறிப்பிட்டு, அதில் ஏ1 ஆக எடப்பாடி உள்ளார்.
இவ்வாறு கூறினார்.
முன்னதாக இன்று காலை கோபிச்செட்டி பாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். செங்கோட்டையன் வீட்டிற்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்தனர். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.