சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்றுள்ளதை தொடர்ந்து,  அ.தி.மு.க., சட்டமன்ற குழு தலைவராக தமிழக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க அவர் கவர்னரை சந்தித்து கோரிக்கை விடுத்தார். ஏற்கனவே  இரண்டு முறை கவர்னரை சந்தித்து வந்துள்ள நிலையில், இன்று காலை   11.30 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை மீண்டும்  சந்திக்க உள்ளார்.

எடப்பாடி உடன் மேலும்  5 பேர்  கவர்னரை சந்திக்க கூவத்தூரில் இருந்து புறப்பட்டனர்.

இன்றைய சந்திப்பின்போது கவர்னர் எடப்பாடியை ஆட்சி அமைக்க அழைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.