சென்னை: தமிழக சட்டப்பேரவையின் நடப்பாண்டின் முதல் கூட்டம் பிப்ரவரி 2ந்தேதி இன்று கூடியது.. 2021ஆம் ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றினார். ஆளுநரின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கூட்டத்தொடர் முழுவதையும் புறக்கணிப்பதாக திமுக வெளிநடப்பு செய்துள்ளது.
அதைத்தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூடியது. இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்று குறித்து விவாதிக்கப்பட்டது. அதன் முடிவுகளை சட்டசபையில் சபாநாயகர் அறிவித்தார். அதனப்டி சபை மேலும் 3 நாட்கள் நடைபெற்று பிப்ரவரி 5ந்தேதியுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டது.
பின்னர், 3ந்தேதி மறைந்த எம்எல்ஏக்கள், தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபை ஒத்தி வைக்கப்பட்டது.
4ந்தேதியான நேற்று சபையில் பல்வேறு நிதிஒதுக்கீடு உள்பட ஆளநர் உரை மீதான விவாதஙகள் நடைபெற்றன.
இன்று கடைசி நாள் கூட்டம் நடைபெற உள்ளது. ஆளுநர் உரைக்கும் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று பதில் அளிக்கிறார்.
அப்போது, தமிழக சட்டமன்ற தேர்தலை கவனத்தில்கொண்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது அறிவிப்பு உள்பட பல்வேறு சலுகைகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பல மேலும் சட்ட முன் வடிவுகள் ஆய்வு செய்தலும் , நிறைவேற்றுதலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சபை கூட்டம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் அதிமுக அரசின் இறுதிக்கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு பிறகு, சட்டமன்ற தேர்தல் நடைபெற்று, புதிய அரசு பதவி ஏற்றுதான் சட்டசபை கூடும் .