சென்னை,

திமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி குறித்து அதிர்ச்சிகரமான தகவல்கள்  வந்தவண்ணம் உள்ளது.

அதிமுக எம்எல்ஏக்களை மிரட்டி வெள்ளை பேப்பரில் கையெழுத்து வாங்கியதாக அவர் மீது புகார் கூறப்பட்டுள்ள நிலையில், அதற்போது ஆள் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிய விவகாரத்தில் எடப்பாடியின் உறவினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய ரூபாய் நோட்டுகளை பதுக்கிய வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி மகனின் சகலை சந்திரகாந்த் என்பவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

ஆனால், எடப்பாடியின் மகன்தான் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில், சிறையில் இருப்பது எடப்பாடி மகனின் சகலை என்பது தெரியவந்துள்ளது.

சசிகலா சிறைக்கு சென்றதையடுத்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி, தன்னை ஆட்சி அமைக்க  அழைக்க கோரி கவர்னரை சந்தித்துள்ள நிலையில் அவர்மீதான குற்றச்சாட்டுக்களும் வலிவடைந்து வருகிறது.

நாட்டில் பழைய நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்து,  புதிய ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட போது நாடு முழுவதும் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்  சோதனை நடத்தினர்.

அப்போது ஈரோட்டில் ஒப்பந்ததாரர் ராமலிங்கம் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது பெங்களூரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது மகன் சந்திகாந்துக்கு சொந்தமான பெங்களூரு நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, சுமார்  6 கோடி மதிப்பிலான புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.