மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
‘
காவல்துறை அதிகாரியிடம் மாதம் ரூ.100 கோடி மாமூல் வசூலித்து தரச்சொன்னது தொடர்பாக பதவியை ராஜினாமா செய்த மகாராஷ்டிரா மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அனில்தேஷ்முக் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறை , சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் 2 உதவியாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதையடுத்து அமலாக்கத்துறை நேற்று தேஷ்முக் வீடுகளில் ரெய்டு நடத்தியது.
இதைத்தொடர்ந்து, அனில் தேஷ்முக் இன்று விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel