மும்பை: கோவாவுக்குச் சென்றுகெண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் மகாராஷ்டிராவில் சுரங்கப்பாதைக்குள் தடம் புரண்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கொரோனா தொற்று காரணமாக சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிராவில் இருந்து கோவா சென்றுகொண்டிருந்த ராஜதானி எக்ஸ்பிரஸ் ஹஸ்ரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் இன்று காலை மகாராஷ்டிராவில் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு ரயில்வே சுரங்கப்பாதையில்  சென்றுகொண்டிருந்தபோது, தடம் புரண்டது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கொங்கன் ரயில்வே செய்தித் தொடர்பாளர்,  விபத்து நடந்த பகுதி மும்பையில் கோவாவின் மட்கானுக்கு ரயில் சென்று கொண்டிருந்ததாக வும், விபத்து நடந்த பகுதி மும்பையில் இருந்து  சுமார் 325 கி.மீ தூரத்தில் உள்ளது என்றும், அங்குள்ள கார்பூட் சுரங்கத்திற்குள் ரயில் தடம் புரண்டது என கூறினார்.

மேலும் விபத்துக்கான காரணம், ரயில் தடத்தில் ஒரு கற்பறை விழுந்தது. இருந்தாலும் இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் எற்படவில்லை.  பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும்,  ஒரு ரயில் பராமரிப்பு வாகனம் (ஆர்.எம்.வி) அந்த இடத்தை அடைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. மேலும்,  விபத்து நடந்த இடத்திலிருந்து  மறுசீரமைப்பு பணிக்காக,  நிவாரண மருத்துவ வேன் (ஏ.ஆர்.எம்.வி), மறு ரெயிலிங் கருவிகள், ரத்னகிரியிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.