டில்லி:

என்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் இன்று பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவரிடம் மேலும் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால், மேலும் 8 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும என்று சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை இன்று பிற்பகல் மீண்டும் நடைபெறும் என்று பாட்டியிலா நீதி மன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இதற்கிடையில், அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு தடை விதிக்க கோரி கார்த்தி சிதம்பரம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம், சம்மனுக்கு தடை விதிக்க மறுத்து வழக்கின் விசாரணையை வரும் 9ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

முன்னதாக கார்த்தி சிதம்பரம் இன்று சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சராக ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தனர்.

மேலும் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரசார்  கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக கோர்ட்டு வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.