ஜெய்ப்பூர்
ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் எம் எல் ஏ பல்ஜீத் சிங் குக்கு சொந்தமான இடங்களில் அமல்லாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பெஹ்ரோர் தொகுதியின் முன்னாள் சுயேச்சை எம்.எல்.ஏ. பல்ஜீத் சிங் பள்ளிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகக்கூறி எம்.எல்.ஏ. நிதியை முறைகேடு செய்தது தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான பல இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
இந்த சோதனை ஜெய்ப்பூர், தவுசா மாவட்டங்களிலும், அரியானாவில் உள்ள ரேவாரி உள்பட மொத்தம் 9 இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனைகள், சம்பந்தப்பட்ட நபர்கள் பற்றிய விரிவான தகவல்கள் எதையும் வெளியிடவில்லை.
ஆனால் அதிகாரி ஒருவர் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்
[youtube-feed feed=1]