சென்னை

தமிழக அமைச்சர் கே நேருவின் சகோதரர் நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது.

தற்போது தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் கட்டுமான நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமலக்கத்துறை அதிகாரிகள் தேனாம்பேட்டை, ஆழ்வார்பேட்டை, பெசன்ட் நகர், சி.ஐ.டி. காலணி, எம்.ஆர்.சி.நகர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சோதனையில் இறுதியிலேயே சோதனைக்கான முழு விரவம், முக்கிய ஆவணங்கள் ஏதேனும் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது தெரியவரும் ஏனக் கூறப்படுகிறது.