சென்னை:

ந்தியாவில் கடன் வாங்கிக்கொண்டு ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்துள்ள பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியின் உறவினரான மெகுல் சோக்சி தன்னால் இந்தியாவுக்கு 41 மணி நேரம் பயணம் செய்து செல்ல முடியாது என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், மெகுல் சோக்சியை அழைத்து வர ஏர் ஆம்புலன்ஸ் உடன் மருத்துவ குழுவின ரும் தயாராக இருப்பதாக ஆன்டிகுவா நாட்டுக்கு இந்திய  அமலாக்கத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு ஆன்டிகுவா நாட்டுக்கு சென்று செபதுங்கியுள்ளார் மெஹுல் சோக்சி. அவரை நாடு கடத்த இந்தியா கோரியுள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற வழக்கின் விசாரணையின்போது,  மெஹுல் சோக்சியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் மும்பை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், மெகுல் சோக்சியிடம் விசாரணைக் குழு ஆண்டிகுவாவிற்கு வந்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் அல்லது  வீடியோ கான்ஃபரன்சிங் வாயிலாக விசாரணைக்கு ஆஜராக விரும்புவதாகவும்  தெரிவிக்கப்பட்டது. தற்போது மெகுல் சோக்சி உடல்நலம் இல்லாமல் இருப்பதாகவும், சமீபத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது, அதன்பிறகு  ஓய்வு எடுக்கும்படியும், பயணிக்கக்கூடாது எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதன் காரணமாக பல விமானங்கள் மாறி சுமார் 41 மணி நேரம் பயணிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.

இவ்விவகாரத்தில் மும்பை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை பதில் பிரம்மாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,  “மெகுல் சோக்சி காட்டியுள்ள மருத்துவ காரணங்கள் அனைத்தும் போலியாகத் தெரிவதாகவும்,  நீதிமன்ற செயல்பாடுகளை தாமதிக்கும் நோக்கில் நீதிமன்றத்தை திசைத்திருப்புவதற்காக போலியான தகவல்களை தெரிவித்து இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தேவைப்பட்டால் மெகுல் சோக்கியை அழைத்துவர தேவையான மருத்துவ நிபுணர்களு டன் ஏர்ஆம்புலன்ஸ் ஒன்றை அனுப்பி அவரை அழைத்து வந்து இந்தியாவில் உயர்தர சிகிச்சை  வழங்க அமலாக்கத் துறை தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விசாரணையில் கலந்துகொள்ள  மெகுல் சோக்சிக்கு பலமுறை வாய்ப்புகள் வழங்கப் பட்டதாகவும், அவர் விசாரணையை தவிர்த்துவிட்டதாகவும், இதுவரை அவர்  விசாரணைக்கு ஒத்துழைத்ததே இல்லை. அவருக்கு எதிராக  இண்டெர்போல் சார்பாக ரெட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. அவர் இந்தியா திரும்ப மறுத்துவிட்டார். அதனால் அவர் தப்பியோடியவராக வும், தலைமறைவாக இருப்பவராகவும் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.