டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், சட்டவிரோத பண பரிமாற்ற (பிஎம்எல்ஏ) சட்டத்தை அமலாக்கத்துறை தவறாக பயன்படுத்துகிறது என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் சட்ட அமைச்சருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை, காங்கிரஸ் தலைவர் சோனியா, அவருடைய மகன் ராகுல் உள்ளிட்டோர் இயக்குனர்களாக உள்ள, ‘யங் இந்தியா’ நிறுவனம் விலைக்கு வாங்கியது. இதில் மோசடி நடந்து உள்ளதாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியசாமி, 2013ல் வழக்கு தொடர்ந்தார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை கடந்தாண்டு இறுதியில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, பவன் பன்சால் ஆகியோரிடம்,  விசாரணை நடத்திய நிலையில், தற்போது,  சோனியா மற்றும் ராகுலிடம் விசாரணை நடத்தி வருகிறது.  கடந்த மாதம் ஆஜரான ராகுலிடம், ஐந்து நாட்களில், 50 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

சோனியா காந்தியிடம் கடந்த 26ந்தேதி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்நாள் 2மணி நேரம் மட்டுமே விசாரணை நடைபெற்ற நலையில், நேற்றைய விசாரணை 6மணி நேரம் நடைபெற்றது. அப்போது, சோனியாவிடம், 28 கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜாராகும் படி சோனியாவுக்கு உத்தரவிடப்பட்டது. இதன்படி 3வது நாளாக சோனியா மீண்டும் ஆஜரானார். அவருடன் பிரியங்கா உடன் சென்றுள்ளார்.

சோனியாவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை எழுந்துள்ளது.

இதனிடையே, அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், விசாரணைக்கு சோனியா முழு ஒத்துழைப்பு வழங்குகிறார். அதனால், விசாரணை இன்றுடன் நிறைவு பெறலாம் என தெரிவித்துள்ளன.

இதுகுறித்து கருத்து தெரிவித்த மூன்னாள் சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், நேஷனல் ஹெரால்டு வழக்கில்,  PMLA பயன்படுத்தப்படும் விதத்தில் தேவை இல்லை என தெரிவித்ததுடன்,  PMLA தவறாகப் பயன்படுத்தப்படுவதை நாங்கள் கண்டிக்கிறோம். அவர்கள் (ED) 3 நாட்களில் 5 நிமிட வேலையைச் செய்வதன் மூலம் தங்கள் திறமையின்மையைக் காட்டுகிறார்கள் என்று தெரிவித்தார்.

அதுபோல, அமலாக்கத்துறை நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறது என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறைக்கு கைது செய்ய அதிகாரம் உண்டு! உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…