சென்னை: ஜோய் ஆலுக்காஸுக்கு சொந்தமான ரூ. 305.84 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை!
ஹவாலா பண மோசடி தொடர்பான வழக்கில் ஜோய் ஆலுக்காஸ் நிறுவன தலைவர் வர்கீஸில் ரூ. 305.84 கோடி மதிப்பிலான அசையும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
சென்னை தி நகரில் உள்ள ஜாய் ஆலுக்காஸ் நகைக்கடையில் கடந்த 2018ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடை உரிமையாளர் வீட்டிலும் சோதனை நடந்தது. சோதனை நடந்த போது கடைக்குள் ஊழியர்கள் அனுமதிக்கப்படவில்லை. வரி ஏய்ப்பு, விற்பனை விவர கணக்குகளில் முறைகேடு புகார் வந்ததை தொடர்ந்து சென்னை, கேரளா உள்ளிட்ட 10 இடங்களில் சோதனை நடத்தினர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. ஜாய் ஆலுக்காஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் தலைவர் ஜாய் ஆலுக்காஸ் வர்கீஸ் 305.84 கோடி ரூபாய் வரை முறைகேடு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அந்த கடை மற்றும் உரிமையாளர்கள் மீது, அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டத்தின் (பெமா) கீழ், வழக்கும்,, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. தொடர்ந்து, அவரது பல்வேறு அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்தது.
இந்த நிலையில், தற்போது அந்நிறுவனத்துக்கு சொந்தமான ரூ. 305.84 கோடி அசையும், மற்றும் அசையாக சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.