ராபாத்

தெலிங்கானாவின் பொருளாதார வளர்ச்சி 10.1% அதிகரித்துள்ளதாக அம்மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ராமாராவ் தெரிவித்துள்ளார்.

தெலிங்கானா இண்டஸ்டிரியல் ஹெல்த் க்ளினிக் லிமிடெட் நிறுவனத்தின் சின்னம் வெளியீட்டு விழாவில் அமைச்சர் ராமாராவ் கலந்துக் கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது :

”தெலிங்கானா மாநிலத்தின் புதிய தொழில் கொள்கை முதல்வர் சந்திரசேகர் ராவ் வழிகாட்டின் படி 2015ல் அறிவிக்கப்பட்டது.

அது முதல் தொழில் துறையில் தெலிங்கானா முன்னேற்றம் அடைந்து வருகிறது.

தெலிங்கானாவின் பொருளாதார வளர்ச்சி 2015-16ல் 9.5%ஆக இருந்த நிலையில், 2016-17ல் 10.1% ஆக உயர்ந்துள்ளது.

தேசிய பொருளாதார வளர்ச்சியான 7.1% விட இது அதிகம்.

இது மற்ற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமான வளர்ச்சி ஆகும்.

நாட்டின் உற்பத்தியில் தெலிங்கானாவின் பங்களிப்பு 4.28% ஆக உள்ளது.

இது போன வருடத்திய 4.21% விட உயர்ந்துள்ளது.

இதன் முன் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்த போது ஆந்திராவின் பங்களிப்பு வெறும் 2.7% மட்டுமே.

இதற்கு முழுக்காரணம் இந்த அரசும், முதல்வருமே ஆகும்.

இவ்வாறு ராமாராவ் கூறினார்.