கொரோனா தொற்றின் 2வதுஅலையின் தாக்கம் தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் உச்சத்தில் இருந்தது. இதனால் கொரோனா ஊரடங்கு கடுமையாக்கப்பட்டது. இதனால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்தது. ஜூன் மாதத்தில் இருந்து மளமளவென குறைந்தது. இதனால், ஜூன் மாதம் பாதியில் இருந்து தமிழ்நாடு அரசு பொது முடக்கத்தில் இருந்து பல்வேறு தளர்வுகளை வழங்கி வருகிறது. கடந்த வாரம் மேலும் பல தளர்வுகளை அறிவித்ததுடன், பொதுப்போக்குவரத்தையும் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் நடமாட்டம் அனைத்து இடங்களிலும் அதிகரித்து காணப்படுகிறது.
இதன் காரணமாக, சில மாவட்டங்களில் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு நேற்று முன்தினம் இருந்ததை விட நேற்று 15 மாவட்டங்களில் அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ள மாவட்டங்களின் விவரம்:
1. கள்ளக்குறிச்சி-128 (1ந்தேதி நிலவரம் 115)
2. காஞ்சிபுரம்-71 (1ந்தேதி நிலவரம் 68)
3. கரூர்- 46 (1ந்தேதி நிலவரம் 32)
4. மதுரை-94 ( 1ந்தேதி நிலவரம் 68)
5. நீலகிரி-90 (1ந்தேதி நிலவரம் 87)
6. பெரம்பலூர்-29 (1ந்தேதி நிலவரம் 22)
7. புதுக்கோட்டை-73 (1ந்தேதி நிலவரம் 66)
8. ராமநாதபுரம்-19 (1ந்தேதி நிலவரம் 14)
9. விழுப்புரம்-70 (1ந்தேதி நிலவரம் 65)
10. சிவகங்கை-66 (1ந்தேதி நிலவரம் 65)
11. தென்காசி-29 (1ந்தேதி நிலவரம் 28)
12. தஞ்சை-248 (1ந்தேதி நிலவரம் 197)
13. தேனி-48 (1ந்தேதி நிலவரம் 45)
14. திருப்பத்தூர்-32 (1ந்தேதி நிலவரம் 31)
15. கடலூர்-127 (1ந்தேதி நிலவரம் 102)
தலைநகர் சென்னையில் தொற்று பாதிப்பு கட்டுக்குள் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்து வருகிறது.ஆனால் பல மாவட்டடங்களில் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக சுகாதாரத்துறையினர் அச்சம் தெரிவித்து உள்ளனர்.