சென்னை: வளசரவாக்கம் தனியார் பள்ளி வேன் மோதி 2ம் வகுப்பு மாணவர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,  தனியார் பள்ளிகளுக்கு தமிழகஅரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை சார்பில் 22 வகையான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னை வளசரவாக்கத்தில், பள்ளி வளாகத்தில் பள்ளி வேன் ஓட்டுநரின் கவனக் குறைவால் வேன் மோதி இரண்டாம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். இது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அநத் பள்ளி வேனின் ஓட்டுநர் மற்றும் கிளினர் ஆகியோரை கைது செய்தனர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கேள்விப்பட்டதும், த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், அந்தப் பள்ளிக்கு விரைந்து சென்று, ஆசிரியா்கள், ஊழியா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். சென்னையின் தென் மாவட்டக் கல்வி அலுவலா் சுரேந்தா் பாபுவும் பல மணி நேரம் விசாரணை செய்தாா். பெரும் சோகத்தை ஏற்படுத்திய இநத் விபத்து தொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் இன்று நேரில் விசாரணை நடத்துகின்றனர்.

இந்த நிலையில், சென்னையில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளுக்கு சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

இந்த நிலையில், 22 வகையான விதிமுறைகளை கடைபிடிக்க தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சென்னையில் உள்ள 500 பள்ளிகளுக்கு சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பள்ளிப் பேருந்துகள், வாகனங்கள் முறையாக பராமரித்து ஆண்டுதோறும் ஆ.டி.ஓ. பரிசோதனைக்கு உட்படுத்தி வாகனங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
புதுப்பிக்காத வாகனங்களை இயக்க கூடாது.
உரிய கல்வித் தகுதி மற்றும் முறையாக பயிற்சி பெற்று உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களை நியமிக்க வேண்டும்.
மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து திரும்ப சென்று விட பயன்படுத்தப்படும் பள்ளி பேருந்துகள், ஆட்டோ ரிக்‌ஷாக்களில் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்றப்பட்டு உள்ளதா என்பதை பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் உறுதி செய்ய வேண்டும்.
பள்ளி வாகங்களில் வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும்.
மாணவர்களை அழைத்து வரும் பள்ளி வாகனங்களில் உதவியாளர்கள் நியமிக்க வேண்டும்.
பள்ளி வாகனங்களில் அதிக அளவு மாணவர்களை ஏற்றக்கூடாது.
பள்ளி வாகனங்களில் சினிமா பாடல் போடக்கூடாது.

குறிப்பிட்டதை விட அதிகயளவில் மாணவர்களை ஏற்றக்கூடாது.

உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள், அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.