டில்லி

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் 110 தொகுதிகளின் பண நடமாட்டத்தை தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்கிறது.

தேர்தல் ஆணையம் வரும் ஏப்ரல் 11 முதல் மே 15 வரை மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் என அறிவித்துள்ளது.   அதிலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலுக்கு வந்து தேர்தல் பறக்கும் படையினர் தொடர்ந்து சோதனைகள் நடத்தி வருகின்றனர்.   ஆவணமின்றி எடுத்துச் செல்லப்படும் அனைத்து ரொக்கம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

தேர்தல் ஆணையம் பல தொகுதிகளில் செலவு அதிகம் செய்யப்படுவதாக கருதி உள்ளது.   இவ்வாறு 110 தொகுதிகளுக்கும் மேல் ஆணையத்தால் கண்டறியப்பட்டுள்ளது.  இதை தவிர மேலும் பல தொகுதிகளில் ஆணையம் கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.   இந்த தொகுதிகளின் எண்ணிக்கை 150 ஐ தாண்டலாம் என கூறப்படுகிறது.

இந்த பட்டியலில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகள் மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, பீகார், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் பல மக்களவை தொகுதிகள் உள்ளன.    இந்த தொகுதிகளுக்கு முதல் முறையாக தேர்தல் செலவுகள் கண்காளிப்பாளர்களை ஆணையம் நியமிக்க உள்ளது.

இந்த தொகுதிகளில் உள்ள அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு ரொக்கம் மட்டுமின்றி மருதுகள், மது மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வழங்கக் கூடும் என ஆணையத்துக்கு தகவலகள் வந்துள்ளன.   கடந்த தேர்தலின் போது இந்த தொகுதிகளில் இது போல பொருட்கள் வழங்கல் நடந்துள்ளதாகவும் புகார்கள் வந்துள்ளன.

தமிழகத்தில் குறிப்பாக கடந்த 2017 ஆம் வருடம் நடந்த ஆர் கே நகர் இடைத்தேர்தல் இத்தகைய பணம் வழங்கும் புகார் காரணமாக தேர்தலை ஒத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.   ஆந்திராவில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுவதால் இங்கும் பெரிதளவில் லஞ்சம் வழங்கப்பட வாய்ப்புக்கள் உள்ளன.

மற்றும் குஜராத், கர்நாடகா, தெலுங்கானா பீகார் உள்ளிட்ட மாநிலங்களிலும் தீவிர கணகாணிப்பை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.     மற்ற மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் அதிகம் பணப் புழக்கம் உள்ள தொகுதிகளையும் கண்டறிய தேர்தல் ஆணையம் ஆய்வு நடத்தி வருகிறது.

இந்நிலையில் மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், ஒரிசா உள்ளிட்ட ப்ல  மாநிலங்களில் இதற்கு முன்பு எவ்வித புகாரும் வரவில்லை எனினும் தேர்தல் ஆணையம் இங்கும் தனது கண்காணிப்பை நடத்தி வருகிறது.