சென்னை:

நேற்று பரபரப்பை ஏற்படுத்திய ரஃபேல் ஊழல் தொடர்பான புத்தகம் பறிமுதல் செய்யப்பட காரண மாக இருந்த தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை அதிகாரிகள் அதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக தேர்தல் ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஃபேல் விமான பேர ஊழல் தொடர்பாக விஜயன் என்பவர் எழுதியிருந்த புத்தகத்தை நேற்று மாலை இந்து என்.ராம் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தப் புத்தக வெளியிடயிருந்த பாரதி புத்தகாலயத்திற்கு சென்ற தேர்தல் பறக்கும் படை போலீசார், புத்தம் வெளியிட தடை விதிக்கப்படுவதாக கூறி, அங்கிருந்த   200க்கும் மேற்பட்ட புத்தகப் பிரதிகளையும் பறிமுதல் செய்தனர்.

இதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது. ஆனால் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதாசாஹூ  இது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என்று தெரிவித்தார்.

இதையடுத்து புத்தகங்கள் மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வெளியிடப்பட்டு விழா நடைபெற்றது.

இந்த நிலையில் உரிய உத்தரவு இல்லாமல்  புத்தகங்களை தடை செய்து, பறிமுதல் செய்தற்காக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தேர்தல் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

உதவி மேற்பொறியாளர் கணேஷ் மற்றும் காவல் உதவி ஆய்வாளர், 2 காவலர்கள் தேர்தல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.   மேலும் புத்தகத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், காவலர்கள் என மொத்தம் 4 பேரும் இது குறித்து விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்  அனுப்பியுள்ளது.