டில்லி,
சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று தேர்தல் கமிஷன் அறிவித்ததாக செய்திகள் வெளியாகின.
ஆனால், தற்போது தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள செய்தியில்,
பிப்ரவரி 2 ம் தேதி அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது தொடர்பான தீர்மான பிரதிகளை தேர்தல் ஆணையம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. தவிர வேறு எந்தவித நோட்டீசும் அனுப்பவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
’அதிமுக பொதுச்செயலாளர் நியமனம் தொடர்பான நகல் தமிழில் உள்ளதால், ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து அனுப்புமாறு அதிமுக அலுவலகத்துக்குத் திருப்பி அனுபப்பியதாகவும், ஆனால் அதிமுகவிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.