சென்னை:

தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் ஏற்பட்டுள்ள குழப்பத்தில் பா.ஜ.க தலைவர்களின் தலையீடு இருப்பதாக சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளளார்.

‘‘ பாஜ கட்சியினர் சிலர் தங்களது சுய விருப்பம் மற்றும் காரணங்களுக்காக தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியலமைப்பு பிரச்னைகளில் தலையீட்டு பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர்’’.என்று சுப்ரமணிய சுவாமி தெரிவித்தார்.
மேலும், அவர் கூறுகையில், ‘‘ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெற அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை. அதனால் கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளைக்கு சென்னை செல்ல வேண்டும்.

ஓ.பனன்ர்செல்வம் மீண்டும் எம்எல்ஏ.க்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். அதற்குள் சசிகலாவுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்று ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்’’ என சுப்ரமணிய சுவாமி சி.என்.என் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியை கட்டுப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்ட எம்எல்ஏ.க்கள் விமானநிலையத்திற்கு அருகே ஒரு ரகசிய இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

முதல்வர் பதவியை சசிகலா நிர்பந்தம் செய்ததன் அடிப்படையில் தான் ராஜினாமா செய்தேன் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்ததன் பேரில் தான் இதில் குழப்பம் ஏற்பட்டது.