டில்லி

தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத் சந்திர பவார் என்னும் பெயருக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

 

சரத்பவார் தமது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை, சரத்பவார் நீக்கினார்., தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்துள்ளதால், தங்களுடைய அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என அறிவிக்கக் கோரினார்.

மேலும் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கோரி அஜித் பவார் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் அஜித்துக்கு ஆதரவாக முடிவு செய்தது. இதன்படி, தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை அஜித் பவாருக்கு கொடுப்பது எனத் தேர்தல் ஆணையம் முடிவு செய்து இதற்கான அறிவிப்பு வெளியானது.

மூத்த தலைவரான சரத்பவாருக்கு பின்னடைவு ஏற்பட்ட  சூழலில், நாடாளுமன்ற மேலாவைத் தேர்தலை முன்னிட்டு, கட்சியின் பெயரைத் தேர்ந்தெடுக்கும்படி சரத்பவார் கேட்டுக் கொள்ளப்பட்டார்., சரத்பவார் தலைமையிலான கட்சிக்குத் தேசியவாத காங்கிரஸ் கட்சி – சரத்சந்திர பவார் எனப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு புதிய பெயருக்குத் தேர்தல் ஆணையம்  ஒப்புதல் அளித்து உள்ளது.